கோடைக்காலத்தில் சிலருக்கு ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படும். இதற்கான வலி மாத்திரைகளால் நிரந்தரமான தீர்வு ஏதும் கிடைக்காது. இதை குணமாக்க என்னதான் வழி? நரம்பியல் நிபுணர்கள் தரும் விளக்கம் இதோ…
“பொதுவாக உடல் நலக் குறைபாடு, சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல் என உடல்நலம் குறையும்போது தலைவலி ஏற்படும். இதுபோன்ற தலைவலி ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.
அதேபோல், ஒற்றைத் தலைவலி இதனால்தான் வருகிறது என குறிப்பாக எந்தக் காரணத்தையும் சுட்டிக்காட்ட முடியாது. ஆனால், மரபியல் காரணங்கள், அதிக வெளிச்சம், இரைச்சல், மன அழுத்தம் என நம் சூழலாலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
எப்போதும் ஏதேனும் யோசித்துக்கொண்டே இருப்பதும், அதிகம் வெயிலில் அலைவதும், தேவையற்ற பிரச்சினைகளை மனதில் போட்டு உழட்டிக் கொள்வதும், மன அழுத்தத்தை ஏற்படுத்தி ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகலாம்.
சாக்லேட் ஐஸ்க்ரீம், சாக்லேட் க்ரீம் பிஸ்கட் என சாக்லேட் கலந்த பண்டங்களில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயனப் பொருட்களாலும் தலைவலி அதிகரிக்கும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், காபி, டீ, குளிர்பானங்கள், சீஸ், பீட்ஸா, ஜங்க் ஃபுட் போன்றவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும்.
தினமும் தியானம் செய்யலாம். வாக்கிங், ஜாகிங் போவதும் பலனைக் கொடுக்கும். இவற்றுடன், நிம்மதியான தூக்கம் ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வைத் தரும்.
வெளியில் செல்லும்போது தொப்பியையும், கூலர்ஸ் அணிவது நல்லது. எப்போதும் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள். தினமும் 2.5 – 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். சன்ஸ்க்ரீன் போன்ற பொருட்களை வாங்கும்போது நறுமணம் இல்லாத ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
ஏசி-யில் மிதமான வெப்பநிலையை பராமரிக்க வேண்டும். 25 – 27 டிகிரி செல்சியஸ் தான் மனித உடலுக்கு ஏற்ற வெப்பநிலை ஆகும். இதை பராமரிப்பது நல்லது. விடுமுறையில் இருக்கும்போதுகூட சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள மறக்க வேண்டாம்.
தொடர்ந்து ஒற்றைத் தலைவலி நீடிக்குமானால் நரம்பியல் நிபுணரைக் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உங்கள் முகத்துக்கேற்ற புருவம் எது?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : ஓட்ஸ் பிஸ்கட்
IPL 2024 : அபார வெற்றி… ஹைதராபாத் அணியை பழி தீர்த்தது சென்னை!