சூப்பர் ப்ளூ மூன் – பார்க்க மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Jegadeesh

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று (ஆகஸ்ட் 30) வானில் நிகழும் அரிய வகை நிகழ்வான ப்ளூ மூன் ‘Blue Moon’ தோன்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த ப்ளூ மூன் நிகழ்வு ’August supermoon’ என்றும் அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் இது போன்ற அதிய நிகழ்வுகள் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும்.

இது பூமியில் இருந்து 360,000 கிலோ மீட்டருக்கு அப்பால் நிகழும். பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு அருகாமையில் இருப்பதால், நிலா வழக்கத்தை விட பெரியதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும். அதன் “நீல” தன்மையை அதன் ஈர்க்கக்கூடிய அளவுடன் இணைத்து, இது “சூப்பர் ப்ளூ மூன்” என்றும் அழைக்கப்படுகிறது.

ப்ளூ மூன்

’ப்ளூ மூன்’ என்று சொல்வதால் நிலா நிறமாக மாறும் என்று அர்த்தமில்லை. மாறாக நிகழ்வின் அரிதான தன்மையைக் குறிப்பதாலும் ஒரே மாதத்தில் இரண்டாவது முழு நிலவாக தென்படுவதாலும் அது ’ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக  கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பௌர்ணமி தென்பட்டது. இந்த அரிய நிகழ்வு இனி 2032 ஆம் ஆண்டு தான் நிகழும்.

இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

இன்று ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 8.37 மணிக்கு தோன்றும்.  அப்போது நிலா வழக்கமாக தோன்றும் பௌர்ணமி நிலாவை விட கூடுதல் வெளிச்சத்துடன் தென்படும்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

காவல்நிலையத்தில் காணாமல் போன செல்போன்கள்: திருடர்கள் கைவரிசை?

ஆய்வுக் கூட்டங்களில் அமைச்சர் உதயநிதி பேசுவது இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share