நடிகர் டி.ராஜேந்தர் என்றாலே அவரின் தலைமுடியும் அந்த தாடியும்தான் அடையாளம். இதை தவிர்த்து விட்டு அவரை நினைத்து பார்ப்பது கடினம். தாடியில்லாத டி. ராஜேந்தரை வெளியே பார்ப்பதும் ரொம்பவே ரேர். அதே போல, வசனத்துக்கு வசனம் அவர் தலையை கோதி விடும் அவரின் ஸ்டைலும் தமிழ் ரசிகர்களால் வெகுவாகவே ரசிக்கப்பட்டது. what happnds to t. rajendar?
ஆனால், காலமும் வயதும் தலையில் முடியில்லாத டி.ராஜேந்தரை பார்க்க வைத்துள்ளது. நடிகர் டி.ராஜேந்தருக்கு தற்போது 69 வயதாகிறது. பன்முகத் தன்மை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.
டி.ராஜேந்தருக்கு இதயத்தில் பிளாக் இருப்பதுடன் வயிற்றில் புற்று நோய் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் இந்த இரு நோய்க்கும் இங்கு சிகிச்சை அளிப்பதை விட அமெரிக்காவில் சிகிச்சை பெற்றால் நன்றாக இருக்கும் என அறிவுரை வழங்கினர்.
இதையடுத்து, தந்தைக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க டி.ஆரின் மகனும், நடிகருமான சிம்பு முதலில் அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தார்.
தொடர்ந்து, அதே ஆண்டில் ஜூன் 14ஆம் தேதி டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இறைவன் மீது நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் உங்களை எல்லாம் வந்து சந்திக்கிறேன்” என்று கூறியிருந்தார். பின்னர், சிகிச்சை முடிந்து ஜூலை மாதம் இந்தியா திரும்பினார். வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில், டி.ராஜேந்தர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.what happnds to t. rajendar?
அப்போது, மிகவும் சோர்வாகவும் நடை தளர்ந்தும் காணப்பட்டார். முகத்தில் தாடியும் வெகுவாக குறைந்திருந்தது. தலை முடியும் கொட்டிப் போயுள்ளது. இதனால், டி.ராஜேந்தர் தலையில் தொப்பி அணிந்திருந்தார். முகத்திலும் பழைய பொலிவு இல்லை. இதை பார்த்த , அங்கிருந்த ஒருவர், திரையுலகில் மிஸ்டர் கிளீன் என்று பெயர் பெற்ற நல்ல மனிதரை கூட முதுமை விட்டு வைக்கவில்லை. நல்லவரோ கெட்டவரோ முதுமையை எதிர்கொண்டேயாக வேண்டுமென்று வேதனையுடன் கூறினார்.