சமையலறையில் சமையலை முடிக்கும் நேரத்தில் வரும் வாசனையே பசி உணர்வை ஏற்படுத்துவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சாப்பிட தொடங்கியதும் உங்களுக்குப் பிடித்த உணவைப் பார்க்கும்போது நாவில் உமிழ்நீர் சுரப்பதை அனுபவித்திருப்பீர்கள். நாம் உணவை உட்கொள்ளத் தொடங்கியதும் அதை செரிப்பதற்காக, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளிட்ட அமிலங்கள் சுரக்கும். இவையெல்லாமே மூளையில் உள்ள நரம்பு மண்டலமும் உடலில் உள்ள ஜீரண மண்டலமும் சேர்ந்து செய்யும் மேஜிக் உணர்வுகள்.
இந்த நிலையில் வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், காலை உணவைச் சாப்பிடத் தவறுவதாலும், பசியே எடுக்காமல் சாப்பிடுவதாலும் இந்த அமிலங்கள் அதிகமாகச் சுரக்கும்போதும் அமிலங்களே சுரக்காத நிலையிலும் இரைப்பையின் சுவரை பாதித்து, புண்ணை ஏற்படுத்திவிடும்.
வயிற்றில் ஏற்படும் புண்ணை ‘அல்சர்’ என்று கூறுகிறார்கள் துறை சார்ந்த மருத்துவர்கள்.
“மசாலா, கார உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, பாக்டீரியா தொற்று (Helicobacter pylori), மன உளைச்சல், அதீத கவலை, ஆஸ்பிரின், ப்ரூஃபென் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் வயிற்றுப் புண்களை ஏற்படுத்தலாம்.
மது அருந்துபவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்களுக்கு அல்சர் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது” என்றும்…
“வயிற்றில் புண் ஏற்பட்டால் வரும் முதல் அறிகுறி வலிதான். பற்றி எரிவது போன்ற கடுமையான வலி, வயிற்றில் ஏற்படும்.
புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படுவதால் இந்த வலி ஏற்படும். அடி வயிறு முதல் நெஞ்சுக்கூடு வரையிலான இடத்தில் வலி ஏற்படலாம். வெறும் வயிறாக இருக்கும் நேரத்தில் வலி இன்னும் அதிகரிக்கும்.
வலி தொடர்ந்து இருக்கும் என்று இல்லை, ஒரு நாள் இருக்கலாம், அடுத்து சில நாள்களுக்கோ, வாரத்துக்கோ வலி இல்லாமல் இருக்கும். பிறகு, மீண்டும் வலி ஏற்படும்.
தவிர, வாந்தியில் ரத்தம் கலந்து வெளியேறுவது, மலத்தில் ரத்தம் வெளியேறுவது, குமட்டல் அல்லது வாந்தி, காரணமின்றி உடல் எடை குறைவது, பசியில் மாறுபாடு போன்றவை ஏற்படலாம்.
மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே குடல்நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
எண்டோஸ்கோப்பி மூலமாக செரிமான மண்டலத்தில் எந்த இடத்தில் புண் உள்ளது என்று பரிசோதனை செய்யப்படும்.
ரத்தப் பரிசோதனை மூலமாகவும் உறுதிப்படுத்தப்படும். பின்னர் மாத்திரை, மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுகளை சரியான வேளையில் சரியான முறையில் சாப்பிடுதன் மூலமும் 90 சதவிகித வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்திவிடலாம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ஆண்களின் க்ளென்சரை பெண்கள் உபயோகிக்கலாமா?
டாப் 10 நியூஸ் : எம்.ஜி.ஆர் நினைவு நாள் முதல் அல்லு அர்ஜூன் ஆஜர் வரை!
கிச்சன் கீர்த்தனா : ப்ளம் கேக்
உணவுத் திருவிழாவில் பீப் புறக்கணிப்பா? – அரசு விளக்கம்!
தமிழகத்தில் மெமு ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரம்!
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்தும் மெகா சர்வே…எதற்காக?
‘அமைதியாக இருக்க முடியாமல் தவித்தேன்’- செஸ் இறுதிப் போட்டி குறித்து குகேஷ்
அதிமுக ஆட்சியமைத்தால்… கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி வாக்குறுதி!