பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற துடிக்கும் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் வாழ்வா, சாவா என்ற நிலையில் வான்கடே மைதானத்தில் இன்று (மே 21) மோதுகின்றன.hat happens if rain stopped DC vs MI match today
எனினும் அங்கு மழை பெய்வதற்கு 85% வாய்ப்புகள் உள்ளதாகவும், இன்று மாலை சுமார் 4 மணி நேரம் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போட்டி ஒருவேளை ரத்தானால் என்ன நடக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
தற்போதைய நிலவரப்படி மும்பை அணி 12 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 12 போட்டிகளில் 6ல் வெற்றி மற்றும் ஒரு போட்டி ரத்தானதால் 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
இரண்டு அணிகளுக்கும் தலா இண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், இரண்டிலும் வென்றாக வேண்டிய நிலை உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும்.
இந்த நிலையில் மும்பை – டெல்லி அணிகள் இடையேயான போட்டி ரத்தானால் அது டெல்லி அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். அந்த அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து 5வது இடத்தில் நீடிக்கும். அதே வேளையில் கூடுதலாக கிடைக்கும் ஒரு புள்ளியுடன் (15 புள்ளிகள்) மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பில் முன்னிலையில் இருக்கும்.

இன்றைய போட்டி ரத்தானாலும், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் பலம் வாய்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்க உள்ளன.
அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையென்றால், புள்ளிப்பட்டியலில் எந்த அணி முன்னிலையில் உள்ளதோ அந்த அணி பிளே ஆஃப் சுற்றில் கால் பதிக்கும்.
இதனையடுத்து மழையால் போட்டி ரத்தாக கூடாது டெல்லி அணி ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
பிளே ஆஃப் சுற்றில் ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இவர்களில் யார் முதலிடம் பிடிக்கப்போகிறார்கள் என்பது பெரும் கேள்வியாக தற்போது உள்ளது.
