துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடல்நலக் குறைவால் ஓய்வில் உள்ளார். What happened to Udhayanidhi
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். இந்தசூழலில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் சோர்வாகவே காணப்பட்டிருக்கிறார். முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற நிலையில், உதயநிதி அதில் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில் இன்று உதயநிதி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு, “தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், தமிழ்நாடு துணை முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதிக்கு சில பரிசோதனைகளும் எடுக்கப்பட்டு, முடிவுகள் இன்னும் வரவில்லை என்று தகவல்கள் வருகின்றன.
What happened to Udhayanidhi
