மனோஜ் பாரதிராஜாவுக்கு என்ன ஆனது?

Published On:

| By Kavi

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் இன்று (மார்ச் 25) காலமானார். What happened to Manoj Bharathiraja

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ். அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்த அவர், சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

இந்தநிலையில் தனது 48 வயதில் இன்று மனோஜ் காலமானார். இளம்வளதில் அவருடைய மறைவு திரையுலகினரையும், அவரது ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

என்ன ஆனது?

நெஞ்சுவலி காரணமாக ஒரு மாதத்துக்கு முன்பு எம்.ஜிஎம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோஜ் பாரதி ராஜாவுக்கு, இதயத்தில் வால்வு ரீப்ளேஸ்மென்ட் ஆப்ரேசன் செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை முடிந்து தொடர்ந்து மருத்துவமனையிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், ஸ்டெல்லிங் ரோட்டில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்து வந்தார்.

இந்தநிலையில் இன்று மாலை திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்திருக்கிறது. இதனால் அவரது வீட்டில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டில் இருந்த அவரை தூக்கி வந்து ஏற்றியிருக்கின்றனர். அப்போது ஆம்புலன்ஸில் வந்தவர்கள் பரிசோதித்து பார்த்ததில் மூச்சு நின்று போனது தெரியவந்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து மனோஜின் உடலை மீண்டும் வீட்டுக்கே தூக்கிச் சென்றனர். அவரது திடீர் மறைவு பாரதிராஜா குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. What happened to Manoj Bharathiraja

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share