“அக்குள் பகுதியில் ஏற்படும் கருமைக்கு உடல் பருமன், ஹார்மோன் சமநிலையின்மை, தவறான உணவுப்பழக்கம் என பல காரணங்கள் இருக்கலாம். டைட்டான உடைகள் அணிவதும் இதற்கு இன்னொரு காரணம். உடைகள் அக்குள் பகுதியில் உராய்வதால், கருமை ஏற்படலாம்.
இன்று ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. அதனால் வியர்வை நீண்ட நேரம் உடலில் தங்கி, இன்ஃபெக்ஷன் வர வாய்ப்புகள் அதிகம்.
சாதாரணமாகவே வியர்வைச் சுரப்பு அதிகமுள்ளோர், அந்த வாடையை மறைக்க பெர்ஃபியூம் மற்றும் டியோடரண்ட் உபயோகிப்பார்கள். அதுவும் ஒவ்வாமையை ஏற்படுத்தி, அக்குள் பகுதியில் கருமையை ஏற்படுத்தலாம்.
மற்ற காரணங்களால் ஏற்பட்டது என்றால் சருமநல மருத்துவரை அணுகுங்கள். அவர் எந்தக் காரணத்துக்கான கருமை ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.
லேசர் சிகிச்சையும் நல்ல பலன் தரும். ஆனால், அக்குள் பகுதியின் சருமம் மிக மென்மையானது என்பதால், இந்தச் சிகிச்சைகளை கவனமாக, அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் செய்து கொள்வது அவசியம்” என்று அறிவுறுத்துகிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கலர்ஃபுல் குடமிளகாய் மிக்ஸ்
“அம்மா ஆட்சி மறந்து போச்சு”: அப்டேட் குமாரு
உண்டியலில் காசு போடாதீங்க… ஒரு நிதியமைச்சர் இப்படி சொல்லலாமா? : தயாநிதி மாறன் காட்டம்!
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு எத்தனை கோடி? மத்திய அமைச்சர் பதில்!