“சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது” என்று அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 8) தீர்ப்பளித்துள்ளது. ten bills Ravi withheld
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களின் விவரம் இதோ…
1.பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதா
2.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா
3.தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
4.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
5.தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா
6.தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
7.தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
8.தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா
9.அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
10.தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களில் பெரும்பாலானவை, பல்கலைக்கழங்கள் தொடர்பானவை. தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால், இனி ஆளுநருக்கு பதிலாக பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார்.
இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி வில்சன், “ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் இன்று முதலே நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.