நடிகர் விஷால் உடல் நலம் பாதிக்க 5 காரணங்கள்… சினிமா வட்டாரங்கள் சொல்வது என்ன?

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் மதகஜராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷாலின் கைகள் கிடு கிடுவென நடுங்கியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

மதகஜராஜா படம் கடந்த 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் செய்யப்படவுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் கூட்டணியில் உருவாகியிருப்பதால் ரசிகர்களிடம் சற்று எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதையொட்டி, இரு நாட்களுக்கு முன்பு மதகஜ ராஜா படத்தின் ப்ரீ ரிலீஷ் ஷோ நடந்தது. விழா மேடையில், நடிகர் விஷால் பேசும்போது ஒருவித நடுக்கத்துடன் பேச்சு இருந்தது. மேலும் மைக்கை பிடித்திருந்த கை கூட படபடவென நடுங்கியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவர் குளிர் காய்ச்சலுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதால், கை நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. விஷாலுக்கு வைரல் காய்ச்சல் வந்திருப்பதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடியும் நடிகை குஷ்பூவும் கூட தெரிவித்திருந்தனர்.

ஆனால், சினிமா உலகில் விஷால் உடல் நிலை பாதிக்கப்பட 5 காரணங்கள் சொல்கிறார்கள். முதல் காரணமாக, ‘அவன் இவன்’ படத்தில் மாறுகண் நடிப்பால் விஷாலுக்கு தீராத ஒற்றை தலைவலி ஏற்பட்டதாகவும் வலியை மறக்க சில விஷயங்களை செய்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதோடு, கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள், லைகாவுடன் மோதல், நடிகர் சங்க பிரச்னைகள், சரத்குமாருடன் மோதல் என எப்போதும் மன உளைச்சலிலேயே அவர் இருந்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த 5 மாதங்களில் அவரின் உடல் நிலை மிக மோசமாகிப் போனதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share