பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வெளியீடு?

Published On:

| By Balaji

ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’, படம், பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த படங்கள் சங்கராந்தி விடுமுறை தினத்திற்காக வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படமும் பொங்கல் விடுமுறையை ஒட்டி இந்த மாதம் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள். படம் யு/ஏ சென்சார் பெற்றது. மேலும் படத்தில் இருந்து பாடல்கள், ஃப்ர்ஸ்ட் லுக் என இரண்டு வருடங்களாக ‘வலிமை’ அப்டேட் கேட்டு வைரல் செய்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியானது. இந்த நிலையில் தான் ஒமிக்ரான் பரவல் காரணமாக திரையரங்குகளுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சூழ்நிலை சரியாகும் வரை தேதி குறிப்பிடாமல் ‘வலிமை’ வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது என அறிவித்தார்கள்.

ADVERTISEMENT

இப்படி ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட பல பெரிய படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதால் ஏற்கனவே முடித்து ரிலீஸூக்கு தயாராக இருந்த வேறு சில படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதன்படி சதீஷ், பவித்ர லக்‌ஷ்மி நடித்துள்ள ‘நாய் சேகர்’ படம் பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமடைந்த அஸ்வின் நடித்துள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகும். மேலும் சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ உள்ளிட்ட சில படங்களும் பொங்கல் ரேஸில் உள்ளது.

ADVERTISEMENT

**ஆதிரா**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share