தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் இன்று (நவம்பர் 14) அதிகாலை முதலிருந்தே கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிக்களுக்கான தேர்வுகள் நடைபெறுமா என்று மாணவர்கள் மத்தியில் கேள்வியும், குழப்பமும் எழுந்தது.
பாலிடெக்னிக் தேர்வு ஒத்திவைப்பு!
இந்த நிலையில் கனமழையால் இன்று மாநிலம் முழுவதும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெற இருந்த பட்டய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி http://dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி தேர்வுகள் நடைபெறும்!
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், திருவள்ளூர் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கலை – அறிவியல் கல்லூரிகளில் ஏற்கெனவே அறிவித்தபடி அரியர் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் இன்று வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா