கார் விபத்து : மம்தாவுக்கு தலையில் அடி!

Published On:

| By Kavi

Mamata Banerjee car accident

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதில், அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வானில் நடந்த அரசு நிகழ்ச்சியில் இன்று (ஜனவரி 24) கலந்துகொண்ட மம்தா பானர்ஜி அங்கிருந்து கார் மூலம் கொல்கத்தா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முதலமைச்சரின் கான்வாய்க்கு முன்பு திடீரென ஒரு கார் வந்ததால், மம்தா சென்ற கார் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்துள்ளார்.

ADVERTISEMENT

இதில் ஓட்டுநரின் இடது பக்க, முன் இருக்கையில் அமர்ந்திருந்த மம்தா விண்ட்ஸ்கீரினில் இடித்துக்கொண்டதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

“அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கிழக்கு பர்த்வானுக்கு ஹெலிகாப்டரில் சென்ற மம்தா பானர்ஜி நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்லாமல், காரில் சென்றார்.

ADVERTISEMENT

அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில்,  கான்வாய்க்கு இடையே ஒரு கார் வந்துவிட்டது. இதனால் மம்தா பானர்ஜி சென்ற கார் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. காயம் பெரிதாக இல்லை. மம்தா பானர்ஜி மருத்துவ சிகிச்சைக்காக கூட இறங்காமல் நேராக கொல்கத்தா சென்றுவிட்டார்” என்று மேற்கு வங்க போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

பிரியா

சென்னைக்குள் அனுமதி இல்லை: போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!

கேலோ இந்தியா பதக்கப்பட்டியல்: 2-ம் இடத்திற்கு சரிந்த தமிழ்நாடு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share