மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ், ‘நமது தலைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.
https://twitter.com/AITCofficial/status/1768286010264502610
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
அவருக்கு என்ன ஆனது, எப்படி காயம் ஏற்பட்டது என எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
மம்தாவின் நடு நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிகிறது. அவர் மயங்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “மேற்கு வங்க முதல்வருக்கு ஏற்பட்ட சாலை விபத்து பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேதாந்தா, பாரதி ஏர்டெல், ராம்கோ, முத்தூட் : தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
இரு நாட்களில் தொகுதி முடிவு : செல்வப்பெருந்தகை பேட்டி!