”நட்பு சக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனியாகவும் நின்று ஜெயிக்க அளவுக்கு கெத்தான படை. TVK படை. ” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் இன்று ஜனவரி 25-ந் தேதி நடைபெற்ற தவெகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: இதுவரைக்கும் ஆட்சியில இருந்தவங்க இப்ப ஆட்சியில இருக்கறவங்க எல்லாரும் எப்டின்னுதான் நம்ம மக்களுக்கே தெரிஞ்சிடுச்சே…

மக்களுக்கு அழுத்தம்
நமக்காக உண்மையா உழைக்கறதுக்கு யாராச்சு வந்துடமாட்டாங்களான்னு அப்படின்னு மக்கள் ஒரு விதமான வெளியே சொல்ல முடியாத ஒருவித அழுத்தத்துல இருக்கற நேரம் இது…
மாத்தி மாத்தி ஓட்டுப் போட்டு ஏமாந்த அவங்க.. இப்ப நம்மள நம்பறாங்க… நம்மளை.. இந்த தமிழக வெற்றிக் கழகத்தை.. இந்த விஜய்யும்
நம்மகூட நிப்பான்னு நம்பறாங்க…
நம்மள நம்பறவங்களுக்காக நாம நம்பிக்கையோடு இருக்கணும்ல?… அப்டின்னா இது முக்கியமான மிக மிக மிக மிக முக்கியமான காலகட்டம்தானே?… அதனாலதான் அவ்வளவு அழுத்தமா சொன்னேன்.
அண்டர் எஸ்டிமேட் போடுறாங்க
இந்த தேர்தல், கூட்டணி இதையெல்லாம் பத்தி நிறைய ஹேஸ்யங்கள் ஜோசியங்கள்னு நிறைய நடந்துகிட்டு இருக்கு இல்லையா?
என்னப்பா இந்த விஜய் இப்பதான் வந்திருக்காரு… இவரு கூட எல்லாம் யாரு வரப்போறாங்க? அவங்க வரமாட்டாங்க.. இவங்க வரமாட்டாங்க..அப்படி இப்படின்னுட்டு நம்மள பத்தி அண்டர் எஸ்டிமேட் பண்ணிகிட்டு இருக்காங்க.. அதெல்லாம் நமக்கு புதுசா என்ன?
30 வருஷமா நம்மளை அண்டர் எஸ்டிமேட் பண்ணிகிட்டுதான் இருக்காங்க.. ஆனா மக்கள் கரெக்ட்டாதான் நம்மளை எஸ்டிமேட் பண்ணி…
ரொம்ப அழகா ரொம்ப அக்கறையா ரொம்ப தெளிவா ரொம்ப தீர்க்கமா நமக்கே நமக்குன்னு ஒரு இடத்த கொடுத்திருக்காங்க இல்ல.. அதுவும் எப்படி? என் கேரியரின் உச்சமான ஒரு இடத்த கொடுத்திருக்காங்க இல்ல.. அத இந்த நாடே பார்த்துகிட்டு இருக்குது இல்ல..
ஏன் எனக்கு அப்படி ஒரு இடத்தை கொடுக்கனும்? ஏன்னா இந்த விஜய்…நம்ம புள்ளையாச்சே
நம்ம அண்ணனாச்சே நம்ம தம்பியாச்சேன்னு அவங்க மனசுல தோணுது…
அதனாலதான் நமக்கு அப்படி ஒரு இடத்தை கொடுத்து உள்ளன்போட அள்ளி அரவணைச்சிக்கிட்டு இருக்காங்க..

ஊழல் செய்யவே மாட்டேன்
அப்படி நம்மளை நம்புறவங்களுக்காக
நாம உழைக்கிறது ஒரு பழக்கமாகி, பழக்கமாகி அதுவுமே என் ஒரிஜினல் கேரக்டராகவே மாறிடுச்சு..
இத்தனை வருஷமா இருக்கிற அந்த உழைக்கிற குணம் அதெப்படி மாறும்? அதெல்லாம்
மாறவே மாறாது… அரசியலுக்கு வந்ததுக்கு அப்றமும் சரி… ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறமும் சரி… ஒன்னே ஒன்னு சொல்றேன் எழுதி வச்சுக்கங்க…
இதுக்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ இல்ல இப்ப இருக்கிறவங்க மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டான்..
ஒரு பைசா தொடமாட்டான்.. எனக்கு அது அவசியமே இல்லை.. புரியுதுங்களா உங்களுக்கு?
எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியமே இல்லை..
ஒரு துளி ஊழல் கறைகூட படியாது.. கறைபடியவும் விடமாட்டான்..
நீங்க கேட்கலாம்.. இது என்ன சினிமாவான்னு? இதென்ன முதல்வன் படமா? ஒரே நாளில் எல்லாத்தையும் கிளீன் பண்ணிருவாரான்னு கேட்கலாம்..
ஓகே.. பிராக்டிக்கலா அது பாசிபிள் இல்லைதான்.. பட் இட் இஸ் பிராசஸ் ரைட்..
இப்படி எதுக்கும் ஆசைப்படாத ஒருத்தன் அரசியலுக்கு வர்றான் அப்படின்னா, அவன் கண் முன்னாடி ஏதாவது ஒரு தப்பு நடக்குதுன்னா அவன் கண் முன்னாடி இப்படி ஏதாவது ஒரு ஊழல் நடக்குதுன்னா அதை பார்த்துகிட்டு அவன் சும்மா இருப்பான்னு நினைக்கிறீங்களா?
ஊழல் அடிமை சக்தி அதிமுக
அதாவது தீய சக்தியாக இருக்கட்டும்..
இந்த ஊழல் சக்தியாக இருக்கட்டும்.. இரண்டும் பேரும் தமிழ்நாட்டை ஆளவே கூடாது..
அப்படிப்பட்ட கட்சிகளை, உணமையா, ‘தில்’லா எதிர்க்கற அந்த ghuts-ம் கெத்தும் நம்மகிட்ட மட்டும்தான் இருக்கு…
அதனால எந்த சூழ்ச்சி பண்ணினாலும் எந்த அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போறதுக்கோ அண்டிப் பிழைக்கிறதுக்கோ இந்த அடிமையா இருக்கிறதுக்கோ நான் அரசியலுக்கு வரலை..
என் மண்ணுக்கும் மக்களுக்கும் யார் தீமை செஞ்சாலும் அதை எதிர்த்து அவங்ககிட்ட இருந்து நம்ம மக்களை பாதுகாக்கிறதுக்காகத்தான் நாம அரசியலுக்கே வந்திருக்கிறோம்..
முக்கியமாக தோழர்களே! மக்களுக்கு என் மேல மட்டும் நம்பிக்கை இருந்தா அதுமட்டும் பத்தாது.. என் கூட டிராவல் பண்ற எல்லா தோழர்கள்கிட்டேயும் அந்த நம்பிக்கை வரணும்..
அந்த நம்பிக்கை இல்லைன்னு நான் சொல்ல வரலை.. இருக்குது.. ஆனா அது தொடர்ந்து இருக்கிற மாதிரி நீங்க எல்லாம் நடந்துக்கனும்.. தப்பு பண்ணினா யாராக இருந்தாலும் தப்பிக்கவே முடியாதுங்கிற பயம் இருக்கனும்..
எல்லாரும் உண்மையா உழைப்பீங்களா?
யாருக்காகவும் எதற்க்காகவும் நம்முடைய அரசியலை காம்பரமைஸ் பண்ணிக்கவே கூடாது… செய்வீங்களா?
தயவு செஞ்சு எல்லோரும் ஒற்றுமையா இருந்து சேர்ந்து உழைச்சு ஜெயிப்பீங்களா?
நமக்காக, நம்ம மக்கள் கண்டிப்பாக ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க.. அதுல எந்த மாற்று கருத்துமே இல்லை. அப்படி ஜெயிக்கிறதுக்காக நாம என்ன செய்ய போறோம்?

அண்ணாவையே மறந்துட்டாங்க
மக்களிடம் செல் என அறிஞர் அண்ணா சொன்னதை ரொம்ப டீப்பா சின்சியரா அடாப்ட் பண்றதோட மட்டுமல்லாம நம்மோட அரசியல்ல அத அப்டியே செயல்படுத்தனும்.. அதுதான் முக்கியம்…
ஏன்னா இப்ப அரசியல்ல இருக்கறவங்க அண்ணாவை மறந்துட்டாங்க…
அண்ணா ஆரம்பிச்ச கட்சியும் அண்ணாவ மறந்து சுயநலமா மாறி பல வருசமாச்சு…
அண்ணா பேருல இருக்கற கட்சியும் அவரை மறந்து பல வருஷமாச்சு.. ஆனா நாம அவரை மறந்துட கூடாது
மக்கள்கிட்ட போகணும்… மக்களோட மக்களாவே இருக்கணும்…மக்களுக்காகவே இருக்கிறோம்…
அதுக்கு நாம என்ன செய்யப் போறோம்?
என்னவெல்லாம் செய்ய போறோம்? அதுக்குதான் இந்த மீட்டிங். ஆரம்பிக்கலாமா?
கள்ள ஓட்டு போடும் இடமா பூத்?
ஆண்ட கட்சி, ஆள்கிற கட்சிகளுக்கு பூத்-னா என்ன தெரியுமா?
பூத்னா அது கள்ள ஓட்டுப் போடுற இடம்.. ஆனா நமக்கு நம்ம TVK-க்கு அது ஜனநாயகக் கூடம்…
அங்க ஜனநாயகத்த திருடாம நாம பாத்துக்கணும்… ஒவ்வொரு ஓட்டையும் பாதுகாக்கணும்…
அந்த ஓட்ட எப்படி பாதுகாக்கிறது?
ஒவ்வொரு வீட்டுல இருக்கிற ஓட்டும் நமக்குதான்னு முதல்ல கன்பார்ம் பண்ணுங்க.. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டுல ரெண்டு, ரெண்டே கால் கோடி ரேஷன்கார்டு இருக்கும்னு நினைக்கிறேன்..
அவங்க எல்லாம் எந்த கட்சியில இருந்தாலும் கட்சி வேறுபாடு தாண்டி இந்த விஜய் அவங்க வீட்டுல ஒருத்தனா வாழ்ந்துகிட்டு இருக்கான்… அவங்க என்னை அவங்க குடும்பத்துல ஒருத்தனா பார்த்துகிட்டு இருக்காங்க..
அதனால கட்சி, கிட்சி எல்லாத்தையும் தாண்டி இந்த விஜய் கூட நிக்கனும்னு முடிவு பண்ணிட்டாங்க..
அப்படி முடிவு பண்ணின அவங்களை பாதுகாப்பாக பூத்துக்கு கூட்டிட்டு வாங்க.. நம்முடைய இந்த விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போட வையுங்க..
ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், கிளைன்னு இங்க வந்து இருக்கிற எல்லா நிர்வாகிகளும்தான் நம்ம கட்சியின் ஆணிவேர்.
நீங்க எல்லாரும் சுதந்திரமா செயல்படனும்.. சுதந்திரமா செயல்பட விடனும்..
நீங்க ஒவ்வொருத்தரும் எனக்கு முக்கியம்.
நீங்கதான் நம்மோட BLA -Booth level agents-ஸோட களத்துல நின்னு வேலை பார்க்கப் போற front line warriors…
ஜனநாயகப் போர்
இப்ப நடக்கப் போறது வெறும் எலக்ஷன் கிடையாது.. இது ஒரு ஜனநாயகப் போர். இந்த democratic battle-ல் lead பண்ணப் போற commandos-ம் நீங்கதான்…
ஏன் இதை இவ்வளவு ஸ்டிரெஸ் பண்ணி சொல்றேன்னா, இந்த தீய சக்தி.. எப்படி இந்த தீய சக்தி, இந்த தீயசக்தியோட தில்லுமுல்லுகள் எல்லாம் உங்களுக்கே நல்லா தெரியும்.
ஏன்னா, முழிச்சிகிட்டு இருக்கும்போதே முழியை தோண்டி எடுத்துகிட்டுப் போற கூட்டம்.. அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்..
எலெக்ஷனுக்கு இன்னும் 3 மாசம்தான் இருக்கு.. அவ்வளவு கூட இல்லைன்னு நினைக்கிறேன்..
சத்தியம்னா உழைக்கனும்
இந்த 3 மாசத்துல நீங்க செய்யப் போற அந்த களப் பணியில்தான் அந்த வெற்றியே இருக்கு..
உங்களுக்கு இந்த விஜய் பிடிக்கும் அப்படிங்கிறது உண்மைன்னா, சத்தியம்னா உங்களோட உழைப்புல அதை காட்டுங்க
அப்புறம், நாங்க அறிவிக்கப் போற வேட்பாளர்களுக்கு உங்களோட முழு ஒத்துழைப்பை கொடுக்கனும்.. கொடுப்பீங்கதானே..
வேலுநாச்சியார் வரலாறு
உண்மையா நடந்த ஒரு கதை ஒன்னு சொல்றேன்..
சொந்த நாட்ட ஒரு கூட்டம் அபகரிக்குது… சொந்த நாட்டுலயே இருக்க முடியாத அளவுக்கு ஒரு நெருக்கடி ஏற்படுது…வேற வழி இல்லாம நாட்டை விட்டே வெளிய போய் காடு, மலைன்னு
சுத்தி, மறைஞ்சி வாழ வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுது..
என்னடா இப்படியே ஓடிகிட்டு இருக்கோமேன்னு தன்னுடைய நட்பு சக்திககிட்ட பேசி,
ஒரு பெரும்படையை திரட்டிக் அதிரடியாக ஒரு போரை நடத்தி நாட்டையே மீட்டெடுத்தது யார் தெரியுமா?
நம்மளோட கொள்கைத் தலைவர்களில் ஒருத்தரான ராணி வேலு நாச்சியார் அவர்கள்தான்…
அவங்களுக்கு நட்பு சக்தியா கூட இருந்து உழைச்சது
சின்ன மருது, பெரிய மருது, சையது கார்கினு மூணு பேரும்தான்…
ஆங்கிலேயப் படை, ஆற்காட்டு படைன்னு இரண்டு பெரும் படைகளை அடிச்சு துவம்சம் பண்ணிட்டு நாட்டையே மீட்டெடுத்தவங்க வேலு நாச்சியார்.
அன்னைக்கு இருந்த ஆங்கிலேயப் படை
ஆற்காட்டு படை மாதிரி இன்னைக்கு என்ன என்ன படை இருக்குதுன்னு உங்க எல்லாருக்குமே நல்லா தெரியும்.
இரண்டு படை மட்டும் இல்லை.. இன்னும் எத்தனை படை வந்தாலும் எதிர்த்து நின்று எதிர்கொள்ள, நல்ல தலைமையும் இத்தனை சக்திகள் என்கூட இருக்கும் போது, நம்ம நாட்டை நம்மளால் மீட்டெடுக்க முடியாதா என்ன?
தனியாகவும் நின்று கெத்தா ஜெயிப்போம்
அதுவும் இந்த படை நம்முடைய இந்த டிவிகே படை, நட்பு சக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனியாகவும் நின்று ஜெயிக்க அளவுக்கு கெத்தான படை.. அதுலயும் ரொம்ப முக்கியமா, இந்த கூட்டத்துக்கு வரலைன்னாலும் போரில் நடந்த கதை மாதிரி கட்ஸான குயிலிகள் நிறைந்த பெண்கள் படையும் நம்ம கூட இருக்காங்க..
அந்த பெண்கள் படையைப் பார்த்துதான் அரசியல் அரங்கமே அதிர்ந்து போயிருக்கிறது.

உறுதி மொழி எடுக்க வைத்த விஜய்
அதனால, எல்லாரும் ஒரு நிமிஷம் எழுந்து நின்று நான் சொல்றதை ரிப்பீட் பண்ணுங்க..
”2026 சட்டமன்றத் தேர்தல்ல… நாம எல்லாரும்
உண்மையாக உழைப்போம்… சத்தியமா உழைப்போம்…
உறுதியாக உழைப்போம்… ஒற்றுமையாக உழைப்போம்…
உங்களோட இந்த வார்த்தைகளை நான் மனப்பூரமா நம்புறேன்..
ஏற்கனவே சொன்ன மாதிரி வரப் போகிற தேர்தல் இதுவரைக்கும் தமிழ்நாடு பார்த்திராத ஒரு வித்தியாசமான தேர்தல்… நம்ம படைவரிசையும் அப்டித்தான்…
ஒரு பவர் packed force.. இவ்வளவு நாளா நாம மட்டும்தான் இதை சொல்லிக்கிட்டு இருந்தோம்… இப்ப கொஞ்சம் கொஞ்சமா வெளியே சொல்ல ஆரம்பிக்கிறாங்க..
என்னடா, இந்த விஜய்கூட இருக்கிற
ஃபோர்ஸ் சாதாரண ஃபோர்ஸ் மாதிரி இல்ல…
மிலிட்டரியவிட ரொம்ப பெரிய ஃபோர்ஸா இருக்குது…
வரப்போற எலெக்ஷன கணிக்கவே முடியலன்னு அப்படி இப்படின்னு சில குரல்கள் எல்லாம் கேட்க ஆரம்பிக்குது..
தமிழ்நாட்டை மீட்போம்
கணிக்கவே முடியலைன்னு அவங்க வேணும்னால் சொல்லலாம்… ஆனால் மக்கள் அல்ரெடி கணிச்சி முடிச்சிட்டாங்க
அவங்க மனசை நல்லா புரிஞ்சு வெச்சிருக்கிற நமக்கு அது நல்லா தெரியும்…
அதனால இந்த எலக்ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறம், தீய சக்திகிட்ட இருந்தும் ஊழல் சக்தி கிட்ட இருந்தும், ஊழல்வாத அடிமை சக்தி கிட்ட இருந்தும் தமிழ்நாட்டை மீட்டுவிட்டோம்னு உறுதியாக இருப்போம்.. அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அதனால் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே! தோழிகளே! உங்களோடு நான் இருக்கிறேன்.. நம்மோடு நம்ம மக்கள் இருக்கிறாங்க.. இதுக்கு மேல என்ன வேண்டும்? கான்ஃபிடெண்ட்டா இருங்க… நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம்… இவ்வாறு விஜய் பேசினார்.
