இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி இந்தாண்டு விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று (அக்டோபர் 6) புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்க இந்திய விமானப்படை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவற்றில் முக்கிய விமானங்களின் விவரங்களை இங்கு காணலாம்.
தேஜஸ் :
தேஜஸ் என்பது ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) ஆல் வடிவமைக்கப்பட்ட மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றை எஞ்சின், டெல்டா விங் விமானமாகும். “தேஜஸ்” என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் “பிரகாசம்” என அர்த்தம். தேஜஸ் ஒரு மேம்பட்ட மின்னணு ரேடார், மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் பார்வைக்கு அப்பால் ஏவுகணைகளை நிலைநிறுத்தும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் முதல் விமானம் 2001ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு நவீன அம்சங்களுடன் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.
பிரசாந்த் :
இந்திய விமானப்படை (IAF) மற்றும் இந்திய ராணுவத்திற்காக உள்நாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உருவாக்கிய இரட்டை இன்ஜின் இலகுரக போர் ஹெலிகாப்டர் (LCH) தான் “பிரசாந்த்”. இது வான் பாதுகாப்பு, வான் தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் அதிக உயரத்தில் (12,000 அடிக்கு மேல்) போர் புரிதல் ஆகியவற்றுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் தயாரிப்பு 2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.
டகோட்டா :
அமெரிக்காவின் டக்ளஸ் விமான நிறுவனத்தின் தயாரிப்பு தான் டகோட்டா என அழைக்கப்படும் ‘டக்ளஸ் சி-47 ஸ்கைட்ரெய்ன்’. பழமையான ராணுவ போக்குவரத்து விமானமான இது உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் முதல் தயாரிப்பு 1941 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 28 வீரர்களையும், அல்லது 7,500 எல்பி சரக்குகளை கொண்டு செல்ல முடியும். இதில், இரண்டு 1200 h.p. பிராட் மற்றும் விட்னி R-1830-90c ரேடியல் என்ஜின்கள் உள்ளன. இரண்டாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்த டகோட்டா, அதன்பின்னர் 1946ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. 34 ஆண்டு சேவைக்கு பிறகு 1980ஆம் ஆண்டு ஓய்வு பெற்றது.
ஹார்வர்ட் :
ஹார்வர்ட் (நார்த் அமெரிக்கன் T-6 டெக்ஸான்) என்பது 1940கள் முதல் 1960கள் வரை இந்திய விமானப்படை (IAF) பயன்படுத்திய ஒரு மேம்பட்ட பயிற்சி விமானமாகும். இது இந்திய ராணுவ விமானிகளுக்கு மேம்பட்ட பறக்கும் நுட்பங்கள், துப்பாக்கி குண்டுகள், குண்டுவீச்சு மற்றும் உருவாக்கம் பறத்தல் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிராட் & விட்னி R-1340 ரேடியல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 208 மைல் வேகத்தைக் கொண்டிருந்தது மற்றும் அதன் வலிமை மற்றும் கையாளுதலுக்காக அறியப்பட்டது.
ரஃபேல் :
ரஃபேல் என்பது பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரட்டை இன்ஜின் கொண்ட பன்முகப் போர் விமானமாகும். இது 2020 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் (IAF) அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. 4.5 தலைமுறையைச் சேர்ந்த ரஃபேல், வான்வழி தாக்குதல், தரைத் தாக்குதல், உளவு மற்றும் அணுசக்தி தாக்கும் திறன் ஆகியவற்றில் பல்துறை திறன் கொண்டதாக அறியப்படுகிறது. ரஃபேல் போர் விமானங்கள் உயரமான பகுதிகளில் செயல்பட முடியும். குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அம்பாலா மற்றும் ஹசிமாரா விமான தளங்களில் இந்திய விமானப்படை ரஃபேல்களை இயக்குகிறது. இது இந்தியாவின் மிகச்சிறந்த போர் விமானமாக கருதப்படுகிறது.
சுகோய் Su-30MKI :
கிறிஸ்டோபர் ஜெமா
இன்னும் சில நாட்களில் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டும்… என்ன காரணம்?
துர்கா பூஜை: உணவு பட்டியலில் இடம்பெறும் மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு… எங்கே தெரியுமா?