4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை அப்டேட்!

Published On:

| By Minnambalam Login1

weather update tamilnadu

தமிழகத்தின் நான்கு கிழக்கு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களிலும்,  தஞ்சாவூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில் ”  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது அதற்கடுத்த இருதினங்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

ADVERTISEMENT

08.11.2024: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

09.11.2024: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

08.11.2024: தென்தமிழ கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

08.11.2024: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தீர்மானம்: சட்டமன்றத்தில் கைகலப்பு!

ஆளுநரை சந்தித்தது ஏன்? – கிருஷ்ணசாமி விளக்கம்!

“எவ்வளவு நாட்கள் சிறையில் வைக்கப்போகிறீர்கள்?” போதை ஜோடிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share