தமிழகத்தில் நேற்று (அக்டோபர் 1) திருப்பூர், மதுரை, கரூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாகத் திருப்பூர் உப்பாறில் 7 செ.மீ மழையும் குறைந்த பட்சமாக மதுரை வாடிப்பட்டியில் 1 செ.மீ மழைப் பதிவானது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 38° செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதே இடத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 19.5° செல்சியஸ் பதிவானது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(அக்டோபர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(அக்டோபர் 3) ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
இன்று மற்றும் நாளை “மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று முதல் அக்டோபர் 4 வரை, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பயணிகள் கவனத்திற்கு… விமான சேவைகளில் மாற்றம் – முழு விவரம் இதோ!
99 ரூபாய்க்கு மது பாட்டில் விற்பனை… ஜாலி மூடில் ஆந்திர குடிமகன்கள்!
சொத்து வரி உயர்வு : மனித சங்கிலி போராட்டம் அறிவித்த எடப்பாடி பழனிசாமி