தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2° முதல் 4° செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(செப்டம்பர் 25) தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு ஒரு சில இடங்களிலும், சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலும் 1 முதல் செ.மீ வரை மழைப் பதிவானது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40.6° செல்சியஸ், குறைந்த பட்சமாக ஈரோட்டில் 19.6° செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் அக்டோபர் 1 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று முதல் 28 வரை, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
இன்று தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சித்தராமையா வழக்கில் 3 மாதத்தில் அறிக்கை கேட்கும் சிறப்பு நீதிமன்றம்!
ஜம்மு காஷ்மீர் இரண்டாம் கட்ட வாக்குபதிவு : 1 மணி நிலவரம் என்ன?
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!