தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 17 செ.மீ, மயிலாடுதுறையில் 15 செ.மீ, நாகப்பட்டினம் திருப்பூண்டியில் 13 செ.மீ என பல்வேறு மாவட்டங்களில் நேற்று(நவம்பர் 19) மழைப் பதிவானது. சென்னையைப் பொறுத்தவரையில் நேற்று மழை பெய்யவில்லை. மாறாக குளிர்ந்த வானிலை நிலவியது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(நவம்பர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில் “23ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
20-11-2024: திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும்,
மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31-32″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஏ.ஆர். ரஹ்மான் குழு கிட்டாரிஸ்ட் மோனிகி தே கணவரை பிரிந்தார்!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: கேட்டை!
‘அரசுப்பள்ளி ஆசிரியர் கொலை அச்சமூட்டுகிறது’ : அதிமுக தலைவர்கள் கண்டனம்!