கொளுத்தும் வெயிலுக்கு இடையே உங்க மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?

Published On:

| By Pandeeswari Gurusamy

Rain

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (மார்ச் 5) சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு உள் கர்நாடகா முதல் தெலுங்கானா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ADVERTISEMENT

05-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

06-03-2026 மற்றும் 07-03-2026: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு
இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

08-03-2026: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

09-03-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

10-03-2026: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

11-03-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு:

06-03-2026 மற்றும் 07-03-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

வெப்பநிலை நிலவரம்

05-03-2026 மற்றும் 06-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
07-03-2026 முதல் 09-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share