நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று அழுத்தமாக கூறியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி சென்னை அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) காலை 9.30 மணிக்கு டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜவாஹிருல்லா பேசுகையில், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதி கொடுத்தாலும் அதில் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். எனவே ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளோம். இதில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக திமுக கூறியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மமக-வை தொடர்ந்து இன்று மதியம் 12.00 மணிக்கு விசிக 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விளவங்கோடு திருக்கோவிலூரில் இடைத்தேர்தலா? : சத்யபிரத சாகு பதில்!
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் : பெற்றோர்களே மறந்துராதீங்க!