திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சிரித்த முகத்துடன் வரவேற்றோம்; பிரதமர் மோடியும் எங்களுக்கு சிறப்பான நல்ல மரியாதை கொடுத்தார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று ஜூலை 26-ந் தேதி தூத்துக்குடியில் ரூ4,900 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் தனி விமானத்தில் திருச்சியை வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமைச்சர் கே.என்.நேரு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ” பாரதப் பிரதமரை பார்த்தோம்.. வரவேற்றோம்..நன்றாக இருந்தது.. சிறப்பாக இருந்தது.. பாரதப் பிரதமரோடு சிரித்த முகத்தோடு அனைவரும் வரவேற்றோம். அவரும் எங்களுக்கு நல்லா சிறப்பான மரியாதை கொடுத்தார்” என்றார்.
