“பெண் சிக்கியது தெரிந்தே காரை ஓட்டினோம்”- டெல்லி குற்றவாளிகள் வாக்குமூலம்!

Published On:

| By Kalai

We drove the car knowing that the woman was trapped

டெல்லியில் இளம்பெண் காருக்கு அடியில் சிக்கி 13 கிலோ மீட்டர் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரத்தில், காருக்கு அடியில் பெண் சிக்கியதை அறிந்தே வாகனத்தை இயக்கியதாக குற்றவாளிகள் ஒப்பு கொண்டுள்ளனர்.

புத்தாண்டு அதிகாலையில் தலைநகர் டெல்லியில் 20 வயதான இளம் பெண் அஞ்சலி சிங் என்பவர் பணி முடிந்து பிறகு வீடு திரும்பும் போது சுல்தான்பூரி அருகே விபத்தில் சிக்கினார்.

ADVERTISEMENT

விபத்தை ஏற்படுத்திய காருக்கு அடியில் இளம் பெண் சிக்கிய நிலையில் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

காரில் கால் மாட்டிய அஞ்சலி சத்தமிட்டும் அதை கண்டுகொள்ளாமல் இழுத்துச் சென்றதில் அந்தப் பெண்ணின் ஆடைகள் கிழிந்து தோல் உரிந்து விலா எலும்புகள் வெளியில் தெரிந்தது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதுதொடர்பாக பாஜக பிரமுகர் உள்பட 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் சந்தேகத்திற்கு இடமான 7வது குற்றவாளியையும் டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே டெல்லி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இளம் பெண் மீது விபத்து ஏற்படுத்திய பிறகு அப்பெண் காருக்கு அடியில் சிக்கியுள்ளார் என்பதை அறிந்தும், பல கிலோமீட்டர் வாகனத்தை இயக்கினோம்.

குடிபோதையில் இருந்ததாலும், அச்சத்தின் காரணமாகவும் காரை நிறுத்தி சிக்கியிருந்த பெண்ணை அப்புறப்படுத்தவில்லை.

அதே நேரத்தில் பெண்ணின் சடலத்தை காருக்கு அடியிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில் வாகனத்தை அதிக முறை யூடர்ன் செய்தோம்.

இறந்த பெண்ணுடன் பிடிபட்டால், கொலைக் குற்றம் சாட்டப்படும் என்பதால் காரை நிறுத்த பயந்ததாகவும், குறிப்பாக காரை ஓட்டி வந்த அமித் கண்ணாவிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இனிப்புக் கடைக்காரர் ஒருவரும், கார் பலமுறை யூடர்ன் போடப்பட்டதாகவும், தான் அவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றதாகவும் போலீசில் தெரிவித்திருந்தார்.

டெல்லி காவல்துறை விசாரணையில் உள்ள குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஐர்ப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலை.ரா

தூண்டிவிட்ட முதல்வர்- வேடிக்கை பார்த்த சபாநாயகர்: அண்ணாமலை

அம்பேத்கர் பெயரை தவிர்க்கும் ஆளுநர், ஏதோ ஓர் உயர் பதவியைக் குறிவைக்கிறார்: சபாநாயகர் அப்பாவு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share