வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் வலியுறுத்தல்!

Published On:

| By Kavi

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 7) வயநாடு விவகாரம் குறித்து பேசினார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கேரள மக்களின் மனதில் நீங்காவடுவாக வயநாடு நிலச்சரிவு உள்ளது .

பாதிக்கப்பட்ட மக்களை முன்னாள் வயநாடு எம்.பி.யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றம் பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) மக்களவையில் வயநாடு நிலச்சரிவு குறித்து ராகுல் காந்தி பேசினார்.

அவர் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு எனது சகோதரியுடன் வயநாடுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன், அந்த மக்களின் வலியையும் வேதனைகளையும் என் கண்களால் பார்த்தேன்.

200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். 400க்கும் அதிகமாக பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகள், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்புத்துறை, அண்டை மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகியவை செய்த உதவிகளை நான் இங்கு பாராட்ட விரும்புகிறேன்.

அதேசமயம் வயநாட்டை மறு கட்டமைப்பு செய்வதற்காக உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

”வினேஷ் போகத் ‘சதி’க்கு பலியாகிவிட்டார்” : முன்னாள் ஒலிம்பிக் பதக்க வீரர் விமர்சனம்!

வினேஷ் தகுதிநீக்கம்: எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share