கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளநிலையில், கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை பெய்துவருகிறது. இதனால், ஏற்பட்ட நிலசரிவுகளால் வயநாடு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 270 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வயநாடு நிவாரண பணிகளுக்கு உதவிட கேரள மாநில அரசு வேண்டுகோள் விடுத்து, வங்கி கணக்கு எண்ணையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் திரையுலகில் முதல் நபராக நடிகர் விக்ரம், வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இருபது லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலம் எதிர்கொண்ட பெருவெள்ளத்தின் போது நடிகர் விக்ரம் கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு 35 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: வெயிட்லாஸுக்கு உதவும் ஊறவைத்த சப்ஜா விதை நீர்!
ஹெல்த் டிப்ஸ்: பணியிடத்தில் களைப்பு… விரட்டுவது எப்படி?
டாப் 10 நியூஸ் : வயநாடு செல்லும் ராகுல் முதல் சென்னை புதிய மேம்பாலம் திறப்பு வரை!