கேரளா மாநிலம் வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியங்கா காந்தி 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
வயநாடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.
அவருக்கு எதிராக இடதுசாரி கூட்டணி சார்பாக சத்யன் மோக்கெரி, பாஜக சார்பாக நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9.15 மணி நிலவரப்படி, பிரியங்கா காந்தி 13,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இவரையடுத்து இடது சாரி வேட்பாளரான சத்யன் மோக்கெரி 3,000 வாக்குகள் பெற்று 10,000 ஆயிரம் வாக்குகள் பின்னால் இருந்தார்.
இந்த சூழலில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, 10.30 மணியளவில் பிரியங்கா காந்தி 1,75,792 வாக்குகள் பெற்று 1,14,794 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சத்யன் மோக்கெரி 60,998 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் வகிக்கிறார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… பாஜகவை பின்னுக்கு தள்ளிய ஹேமந்த் சோரன்
மகாராஷ்டிரா தேர்தல் முன்னிலை நிலவரம்… 100 இடங்களைத் தாண்டிய என்டிஏ கூட்டணி!