ADVERTISEMENT

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 750 கன அடி நீர் திறப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Water release from Chembarambakkam Lake

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் அதிகரித்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் 750 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருமழை தீவிரமடைந்த நிலையில் சென்னை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டமும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (அக்டோபர் 23) காலை 10 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2220 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 20.84 அடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 அடியில் இருந்து 750 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கிய நிலையில் முன்னெச்சரிக்கையாக வினாடிக்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகமானதை அடுத்து, நேற்று முன் தினம் (அக்டோபர் 21) மாலையில் விநாடிக்கு 100 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டது. தொடந்து கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று (அக்டோபர் 22) காலை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 2,220 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நேற்று 500 கனஅடி வரை நீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share