ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், பகத்பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன் என மொழிவாரியான நட்சத்திர குவியலாக நடித்திருக்கும் திரைப்படம் வேட்டையன்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா புரடக்க்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற த.ச.ஞானவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள வேட்டையன் திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த்துக்கேயுரிய பஞ்ச் வசனங்கள் ட்ரெய்லர் முழுக்க நிரம்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் ட்ரெய்லரைகொண்டாடி வருகின்றனர்.

ட்ரெய்லர் எப்படி?
குற்றவாளியை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் போராட்டக் காட்சிகள் வருகின்றன.
இங்க பொண்ணுங்களுக்கு எங்க பாதுகாப்பு இருக்கிறது? பொறுக்கிகளுக்குத்தான் பாதுகாப்பு இருக்கிறது என்ற வசனம் அந்தப் போராட்டக் காட்சியின் பின்னணியை யூகிக்க வைத்து விடுகிறது.
பின்னர் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்று அதனை சுற்றிபோலீஸார் தடயங்களைச் சேகரிக்கின்றனர்.
ஒரு வாரத்துல என்கவுன்டர் பண்ணியே ஆகணும் என காவல் துறை உயர் அதிகாரி கூற, ‘தேவையில்ல சார், ஒரு வாரம் ரொம்ப அதிகம், மூணு நாள் போதும்’ என்ற வசனத்தை பேசியபடி மெலோடியான ஹம்மிங் ட்யூன் இசை ஒலிக்க ரஜினிகாந்த் அறிமுக காட்சி இடம்பெற்றுள்ளது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற வசனத்துடன் அமிதாப்பச்சன் அறிமுகமாகிறார். அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பதும் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பது போன்ற காட்சிகளும் வருகின்றன.
பின்னர், தொடர்ச்சியாக ராணாடகுபதி, பஹத் ஃபாசில், துஷாரா விஜயன் என அனைத்து கதாப்பாத்திரங்களின் அறிமுகமும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
நேரத்தோட அரும தெரிஞ்ச ஒருத்தனாலதான் சாதிக்க முடியும்,
திருடனா இருக்கிறதுக்கு முகமூடி தேவையில்லை,கொஞ்சூண்டு மூளை இருந்தா போதும்,
அநீதியை நீதியாலதான் வெல்லணும், அநீதியை இன்னொரு அநீதியால வெல்லக் கூடாது,
அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியா இருக்கிறதவிட, அதிகாரத்தை கையில எடுக்கிறதுல தப்பே இல்ல சார்…
என ட்ரெய்லரில் வரும் ரத்தின சுருக்கமான வசனங்கள் கவனம் பெறுகின்றன.
இறுதியாக நீங்க என்னை எத்தனை ஊருக்கு மாத்தி அடித்தாலும், அவன் என்கிட்ட தப்பவே முடியாது சார் என்று ரஜினிகாந்த் பேசும் வசனத்துடன் ட்ரெய்லர் நிறைவடைகிறது.
மொத்தத்தில் சமகால இந்திய அளவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதற்கு எதிரான என்கவுண்டர், அதனை பற்றிய அறிவு சார்ந்த விவாத களமாக வேட்டையன் திரைப்படம் இருக்கும் என்பதை அப்படத்தின் ட்ரெய்லர் உணர்த்துகிறது.
என்கவுன்டர், காவல் துறை, பத்திரிகையாளர்கள், போராட்டம், என பரபரப்பான காட்சிகள், ரஜினிகாந்தின் அறிமுக காட்சி சண்டைக் காட்சிகள் என ட்ரெய்லர் முழுவதும் நிரம்பியிருக்கிறது. இத்திரைப்படம் வரும் அக்.10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
– இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: பல் சொத்தை வராமல் தடுக்க… இதைக் கடைப்பிடியுங்கள்!
பியூட்டி டிப்ஸ்: கருவளையம் வராமல் இருக்க… வந்தால் விரட்ட… ஈஸி வழிகள் இதோ!
டாப் 10 நியூஸ் : இஸ்ரேல் தாக்குதல் முதல் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடக்கம் வரை
கிச்சன் கீர்த்தனா : தினை அரிசி சர்க்கரை பொங்கல்
![]()
