அமெரிக்காவில் ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பெப்பர் ஸ்ப்ரே அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் அண்டிகோ மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது மாணவி ஒருவர் மொபைல் போனை பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

அந்த மாணவியிடம் இருந்து மொபைல் போனை பிடுங்கிய ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே எடுத்து சென்றார். ஆத்திரமடைந்த மாணவி ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்தார். இதனால் ஆசிரியர் மயங்கி கீழே விழுந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Onlybangers.eth என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் வகுப்பறையில் இருந்து வெளியேறும் ஆசிரியரிடம் மாணவி செல்போனை கேட்கிறார். அவர் தர மறுத்ததால் ஆசிரியர் மீது இரண்டு முறை பெப்பர் ஸ்ப்ரே அடிக்கிறார். இதனால் ஆசிரியர் மயங்கி கீழே விழுகிறார். ஆசிரியரிடம் தனது மொபைல் போனை தரும்படி அந்த மாணவி கேட்டுக்கொண்டே இருக்கிறார்..
இந்த பதிவில் பலரும் அந்த மாணவியின் செயலை கண்டித்து இதுபோன்ற செயலை பள்ளிகளில் ஊக்கப்படுத்தக்கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார்?: கருத்துக்கணிப்பு முடிவுகள்!