80-களில் தமிழ் சினிமாவை கலக்கிய ஹீரோக்களில் நடிகர் மோகனும் ஒருவர். அதிகப்படியான வெள்ளி விழா திரைப்படங்களை அளித்துள்ளார்.
இதனால் சினிமாவில் அவருக்கு ‘வெள்ளி விழா நாயகன்’ என்கிற பெயரும் உண்டு. அதோடு பல புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
நன்றாக நடித்துக் கொண்டிருந்த மோகன் திடீரென தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனார். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவரை பலரும் தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் எதற்கும் சம்மதிக்கவில்லை.
இந்தநிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது மீண்டும் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘ஹரா’ என பெயரிடப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இதில் மோகனுடன் இணைந்து குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, மைம் கோபி, தீபா போன்ற பலர் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது.இதில் நடிகர் மோகனைப் பார்த்த ரசிகர்கள் “இப்படி மாஸாக களமிறங்கத் தான் இவ்வளவு நாள் காத்திருந்தாரா? என்று மனந்திறந்து பாராட்டி வருகின்றனர்.
அடுத்ததாக நடிகர் மோகன், தளபதி விஜய்யின் ‘GOAT’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் அவருக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை” : சீமான்
‘இவன்லாம் என்ன பண்ணி’… வெளிப்படையாக பேசிய விஷால்
IPL 2024: முஸ்தபிசுர் தொடர்ந்து சென்னைக்காக விளையாடுவாரா?… வெளியான புதிய தகவல்!