சூர்யா பிறந்தநாள் : ரத்தம் தெறிக்கும் கிளிம்பஸ் வெளியிட்ட கார்த்திக்

Published On:

| By christopher

நடிகர் சூர்யாவின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, ரத்தம் தெறிக்கும் கிளிம்பஸ் வீடியோ ஒன்றை இன்று (ஜூலை 23) அதிகாலை ‘சூர்யா 44’ என பெயரிடப்பட்டு சூர்யா நடித்து வரும் படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யா நடிக்கும் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமானில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை முதல் ஷாட் வீடியோ என்ற பெயரில் படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. கிளாப் அடித்து தொடங்கும் அந்த வீடியோவில் ஒரு குட்டி சுவரில் அமர்ந்திருக்கும் சூர்யா, 80களின் வில்லன் போல பெரிய மீசையும், நீண்ட தலைமுடியுடன் காட்சியளித்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் சூர்யாவின் பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில்‘சூர்யா 44’ படத்தின் புதிய கிளிம்பஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கிளிம்பஸ் என்ன சொல்கிறது?

ஒரு பழைய கட்டிடத்தின் வெளியே ஆட்கள் சிலர் வரிசையாக நின்றிருக்க, திரையில் ஒரு காதல், ஒரு சிரிப்பு, ஒரு யுத்தம் என்ற வரிகள் வருகின்றன.

தொடர்ந்து கருப்பு நிற உடையில், ரத்தம் தோய்ந்த முகத்துடன் வெளியே வரும் சூர்யா, அருகில் இருக்கும் நபரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி லோட் செய்து திரையை நோக்கி சுடுகிறார்.

பெயரிடப்படாத ‘சூர்யா 44’ திரைப்படம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பார்முலா படி அடிதடி, கேங்ஸ்டார் படமாக இருக்கும் என்பதை இந்த கிளிம்பஸ் உறுதி செய்கிறது.

https://www.youtube.com/watch?v=R1ShN3v8TKo

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: திடீர் மயக்கத்துக்கு இனிப்பு சாப்பிடுவது சரியானதா?

டாப் 10 நியூஸ் : பட்ஜெட் தாக்கல் முதல் கங்குவா முதல் சிங்கிள் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : சோயா பீன்ஸ் இட்லி

மீண்டும் அதே அல்வாவை கிண்டிருவாங்களோ? அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share