ஃபேக் ஐடியில் நடிகையை ‘பாலோ’ செய்த தயாரிப்பாளர்!

Published On:

| By christopher

Mithra Mandali Movie Teaser

சமூகவலைதளங்களில் பிரபலமாக உலாவுவதில் இருக்கிற சாதக, பாதகங்கள் ஏராளம். அதிலொன்று, நம்மைப் பின்தொடரும் ஃபேக் ஐடிகளின் கருத்துக் குவியல்கள். சில நேரங்களில் இன்னார்தான் பின்தொடர்கின்றனர் என்பதே சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் இருக்கும். இத்தனைக்கும் அவர்களது கமெண்ட்கள் அவரது மனதுக்கு நெருக்கமானதாகவோ அல்லது கடுப்பேற்றுவதாகவோ இருந்திருக்கும். ஆனாலும், அந்த நபர் அருகில் இருந்தாலும், அந்த பிரபலங்களுக்குத் தெரியாது. Mithra Mandali Movie Teaser 2025

இந்த ’ஃபேக் ஐடி’ பிரச்சனையைச் சமீபத்தில் ‘காமெடி’ ஆக்கியிருக்கிறார் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்.

இவர் தயாரித்துள்ள ‘மித்ர மண்டலி’ படத்தின் டீசர் வெளியீடு சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது. இதில் பிரியதஷி, விஷ்ணு, ராஹ் மயூர், பிரசாத் பேஹரா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நாயகியாக நடித்திருக்கிறார் நிஹாரிகா என்.எம். ’பெருசு’ படத்தில் வைபவ் ஜோடியாக அறிமுகமானவர் இவரே. Mithra Mandali Movie Teaser 2025

இந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அரவிந்த், படக்குழுவோடு நிஹாரிகா இணைந்தது எப்படி என்று தெரிவித்திருக்கிறார். அப்போது, படப்பிடிப்புக்கு முன்னதாகத் தயாரிப்பாளர் ஃபன்னி வாசு நாயகி நிஹாரிகா உட்படப் பலரது புகைப்படங்களைத் தன்னிடம் காண்பித்ததாகக் கூறியிருக்கிறார். Mithra Mandali Movie Teaser 2025

சிறிது இடைவெளி விட்டு, ’ஆனால், நான் நிஹாரிகாவைத் தான் தேர்ந்தெடுத்தேன். நீண்டகாலமாக இன்ஸ்டாகிராமில் அவரை பாலோ செய்து வருகிறேன்’ என்று குறிப்பிட்டாராம்.

‘ஒரிஜினல் ஐடியில் பாலோ செய்தால் ட்ரோல் செய்துவிடுவார்கள் என்றெண்ணி ஃபேக் ஐடியில் பின்தொடர்ந்தேன். நிஹாரிகாவோட இன்ஸ்டா ஆக்டிவிட்டி ரொம்ப ஃபாஸ்ட் அண்ட் பாப்புலர்’ என்றிருக்கிறார் அல்லு அரவிந்த்.

இது தெலுங்கு திரையுலக ரசிகர்கள் சிலரை ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம். அது சரி, பிரபலங்கள் ஃபேக் ஐடி’யில பாலோ பண்ண மாட்டாங்கன்னு நாம நம்புனா அவங்களா பொறுப்பு..?!

இந்த ‘மித்ர மண்டலி’யோட டீசர் இப்போது சமூகவலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதை பார்க்கிறப்போ, இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ‘கட்’ பண்ண ‘ரெட்ரோ’ ட்ரெய்லர் நினைவுக்கு வருதுன்னு சொல்றவங்க கை தூக்குங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share