கணவர் அஜித்துடன் எடுத்த வீடியோவை ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது அஜித் கைவசம் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உள்ளன.
அஜித் தனது மனைவி நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
25 ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் அஜித் ஷாலினி தம்பதியினர் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு இருக்கும் இடங்களை ஒன்றாக சேர்ந்தே சுற்றிப் பார்க்கின்றனர்.
Watch in: https://www.instagram.com/
அதுகுறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஷாலினி, ‘ஒன்றாக இருப்பதே ஒரு அற்புதமான இடம்’ என ஹார்டின் சிம்பலை பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித் மகன் ஆத்விக்கிற்கு கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம். அதற்காக ஸ்பெயின் நாட்டில் நடக்கும் போட்டியைக் காண்பதற்காக ஆத்விக்கை அழைத்துக் கொண்டு அஜித், ஷாலினி சென்று இருக்கிறார்கள். அங்குதான் இந்த வீடியோவை ஷாலினி எடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாரத்தின் முதல் நாளன்று குறைந்த தங்கம் விலை…மக்கள் மகிழ்ச்சி!
சோகத்தில் முடிந்த வான் சாகசம் : 250 பேர் மயக்கம்…5 பேர் பலி – மருத்துவர் சொல்வது என்ன?
அரசு தொகுப்பு வீடு இடிந்து தம்பதியர் மருத்துவமனையில் அனுமதி!