போர் பதற்றம்… பொது மக்களுக்கு என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படும்?

Published On:

| By Kavi

War tension What should the general public do

நாடு முழுவதும் நாளை (மே 7) போர் ஒத்திகை மேற்கொள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. War tension What should the general public do

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ADVERTISEMENT

எல்லையில் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு விதிகளை மீறி வரும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இந்தியா தயாராகி வருகிறது. 

இந்தநிலையில் நாளை மே 7 முதல் மே 9 வரை போர் பயிற்சி நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT

டெல்லி, ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், சண்டிகர், உத்தரகண்ட், மேற்கு வங்காளம், கோவா உள்ளிட்ட 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் பயிற்சிகள் நடைபெறும்  என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

சென்னையில்  விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய இடங்களில் ஒத்திகை நடைபெறவுள்ளது

ADVERTISEMENT

ஒத்திகையின் போது என்ன செய்ய வேண்டும்?

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படும். எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் இவ்வாறு செய்யப்படும். 

இந்திய விமானப்படையுடன் ஹாட்லைன்/ரேடியோ தொடர்பு இணைப்பு செயல்படுத்தப்படும்.

கட்டுப்பாட்டு அறைகள் / நிழல் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுத்தப்படும்.

போர் தாக்குதலின் போது தங்களை தற்காத்துகொள்ள பொதுமக்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். War tension What should the general public do

பாதுகாப்பு, தீயணைப்பு, மீட்பு சேவை ஆகியவை செயல்படுத்தப்படும். 

எதிரி நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டால் பொதுமக்கள்  பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை, முதற்கட்ட மருத்துவ உதவி, எச்சரிக்கை குறியீடுகளை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படையான ராணுவ பயிற்சி வழங்கப்படும். 

அதுபோன்று எதிரி நாடுகள் தாக்குதலில் ஈடுபடும் போது குடியிருப்புகளை கண்டறிவதை தடுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கடிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படும். 

ராணுவ கிடங்குகள், தொலைதொடர்பு மையங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட  முக்கிய கட்டமைப்புகள் எதிரிகள் கண்டறியாமல் இருக்க தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

எதிரிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக  மக்களை வெளியேற்றுவது, பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். War tension What should the general public do

இந்த பயிற்சிகளை எல்லாம் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. 

போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில்,  இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஏற்கனவே இதுதொடர்பாக ஐநா செயலாளாரிடம் ஷெபாஸ் ஷெரீப் பேசிய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share