ADVERTISEMENT

8-வது நாளாக நீடிக்கும் யுத்தம்: இஸ்ரேல் மீது ஏவுகணைகளுடன் கொத்து குண்டுகளை வீசும் ஈரான்!

Published On:

| By Minnambalam Desk

Israel Iran War

இஸ்ரேல்- ஈரான் இடையேயான யுத்தம் 8-வது நாளாக தொடருகிறது. இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களுடன் கொத்து குண்டுகளையும் ஈரான் வீசித் தாக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. War Enters 8th Day: Iran Launches Rockets and Cluster Bombs at Israel

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பான இஸ்ரேலுடனான ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. இதனையடுத்து அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

ஈரான் தலைநர் டெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களை இஸ்ரேல் உருக்குலைத்துள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் கிடங்குகளை இஸ்ரேல் அழித்து வருகிறது.

இஸ்ரேலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ஏவுகணைகளுடன் கொத்து குண்டுகளையும் இஸ்ரேல் மீது வீசி வருகிறது ஈரான்.

ADVERTISEMENT

இஸ்ரேல்- ஈரான் யுத்தத்தால் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவோ ஈரானை மிக கடுமையாக எச்சரித்து, சரணடைய வேண்டும் என்கிறது. ஆனால் இஸ்லாமிய நாடுகள் ஈரானை ஆதரிக்கின்றன.

இந்த யுத்தத்தால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து தங்களது நாட்டவரை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share