வக்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று (ஆகஸ்ட் 8) தாக்கல் செய்யப்பட்டது.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாய் மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே வக்பு சொத்துகளை நிர்வகிப்பதற்காக 1995ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தில் மத்திய அரசு தற்போது திருத்தம் கொண்டுவந்துள்ளது. 40 வகையான திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரும் உறுப்பினராக இடம் பெறுதல், வக்பு வாரியத்தில் கணிசமான அளவு முஸ்லிம் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குதல் வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது,
வக்பு வாரிய நிலங்களை இந்திய அளவிலான இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த மசோதாவுக்கு ஏற்கனவே முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன
இந்நிலையில் இந்த சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு இன்று தாக்கல் செய்தார்.
இதற்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
திமுக எம்.பி.கனிமொழி பேசுகையில், “இந்த மசோதா ஒரு குறிப்பிட்ட மதக் குழுவை குறிவைக்கிறது. சிறுபான்மையினர் தங்கள் நிறுவனங்களை நிர்வகிப்பதைக் கையாளும் பிரிவு 30ஐ மீறுகிறது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கே எதிரானது.
ஒரு மதத்தினரின் உரிமையில் மற்ற மதத்தினர் ஏன் தலையிட வேண்டும். இந்து அல்லாதவர்களை இந்து கோயிலை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா?” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
இவ்வாறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வரலாறு படைக்கும் திருத்தங்களுடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜுஜு பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்… வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி : பதிலடி கொடுத்த டி.ஆர்.பி.ராஜா
ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்… வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி : பதிலடி கொடுத்த டி.ஆர்.பி.ராஜா