நடிகர் மம்முட்டி தான் வசித்து வந்த வீடு ஒன்றில் ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.Want to stay at Mammootty’s house?
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நீண்ட காலமாக கொச்சி பானம்பிள்ளை நகரிலுள்ள கே.சி.ஜோசப் சாலையிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் இங்குதான் வசித்தார். மம்முட்டி மகன் துல்கர் சல்மான் உள்ளிட்ட குழந்தைகள் பிறந்த இடம். இந்த வீட்டில்தான் துல்கர் சல்மான் திருமணமும் நடந்தது.
அதனால், கொச்சி மக்களுக்கு மம்முட்டி வீடு ரொம்பவே பிரபலம். பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பாலிபாதம் ரோட்டிலுள்ள விட்டிலா என்ற வீட்டில் குடிபெயர்ந்தார். இதனால், பழைய வீடு காலியாகவே இருந்தது. Want to stay at Mammootty’s house?
தற்போது, அந்த வீட்டை பழுது பார்த்து தனது ரசிகர்கள் விருப்பப்பட்டால் தங்கும் வகையில் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். வொக்கேஷன் எக்ஸ்பிரியன்ஸ் என்ற தனியார் நிறுவனம் மம்முட்டியின் வீட்டை தங்கும் விடுதியாக மாற்றியுள்ளது. இதற்கான, புக்கிங்களும் தொடங்கி விட்டன.
மம்முட்டியின் தீவிர ரசிகர்கள் அவர் பயன்படுத்திய அறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு, தங்கும் ரசிகர்களுக்கு நடிகர் மம்முட்டியின் பிடித்தமான உணவுகள் தயார் செய்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.