சாப்பிட்டவுடன் எவ்வித அவசரமோ, பதற்றமோ இன்றி சுமார் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு மிகக் குறைந்த வேகத்தில் நடப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
“உணவை முடித்த மறுநொடியே கணினி முன்பு அடைக்கலமாகும் சூழலில் பணிபுரிபவர்கள், இரவு உணவைச் சாப்பிட்டவுடன் உறக்கத்தைத் தழுவ ஆசைப்படுபவர்கள், சாப்பிட்ட பிறகு சிறு நடை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தப் பழக்கத்தை மேற்கொண்ட பிறகு உங்கள் மனதில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். அலுவலகங்களில் மதிய நேரத்தில் மெலிதான நடைபோட வாய்ப்பு இருப்பவர்கள் முயற்சி செய்யலாம். விடுமுறை நாட்களில் காலை உணவை முடித்த பிறகும் பத்து, பதினைந்து நிமிடங்கள் நடக்கலாம்” என்கிறார்கள்
இப்படிச் சாப்பிட்டவுடன் மெதுவான நடை பயில்வதால், செரிமான மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரித்து மலச்சிக்கல், உணவு எதுக்களித்தல், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
நீரிழிவு நோயாளர்கள் காலை எடுக்கும் வேக நடையோடு இரவு உணவுக்குப் பிறகு மெது நடையையும் வழக்கமாக்கிக் கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறைவதாக ஆரம்ப நிலை ஆய்வுகள் சொல்கின்றன.
“இடையூறு அற்ற உறக்கத்தைத் தேடுபவர்கள் சிறு நடை போகலாம். இதனால் மனதுக்கு உற்சாகத்தை அளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து மன அழுத்தம் நீங்கி உங்களுக்குள் மகிழ்ச்சி பிறக்கும். அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்வீர்கள்” என்று நம்பிக்கையளிக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கலர்ஃபுல் குடமிளகாய் மிக்ஸ்
“அம்மா ஆட்சி மறந்து போச்சு”: அப்டேட் குமாரு
யூனியன் பட்ஜெட்-பூர்வோதயா திட்டம் என்றால் என்ன?
மாணவர்கள் ரூ.1000 பெற ஆதார் அவசியம் : வேறு என்ன ஆவணங்கள் தேவை?