234-ம் இரட்டை இலை: ஜனநாயகப் படுகொலை

Published On:

| By Balaji

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகைதந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுக வேட்பாளர் பட்டியலில், தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 227 இடங்கள்போக வெறும் 7 இடங்களை மட்டுமே கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளது. கூட்டணி வேட்பாளர்களையும் இரட்டை இலைச் சின்னத்திலேயே நிற்கவைத்துள்ளது. இது, அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடியாக இருந்த கடன், அதிமுக ஆட்சியில் 2.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, நமது அடிப்படைப் பொருளாதாரத்தையே தகர்க்கக்கூடியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் முதல்வரை எதிர்த்துப் போட்டியிட்டேன். அங்கு எப்படியெல்லாம் பணம் மற்றும் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது என்பதை கண்கூடாகப் பார்த்தேன். முழுக்க முழுக்க தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாகவே செயல்படுகிறது என்பதுதான் உண்மை. இதை முறியடித்து தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share