லண்டனில் மோடியின் மெழுகுச் சிலை

Published On:

| By Balaji

லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டூஸாட்ஸ் மெழுகுச் சிலை காட்சியகத்தில் பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையை ஏப்ரல் மாதத்தில் காட்சிப்படுத்த உள்ளதாக மேடம் டூஸாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் மெழுகுச் சிலை ஹாங்காங், சிங்கப்பூர், பாங்காக் ஆகிய இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அவருடைய மெழுகுச் சிலையை செய்ய அளவெடுப்பதற்காக டெல்லி வந்த மெழுகுச்சிலை கலைஞர்களுக்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கிக் கொடுத்தார். இதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இந்தியத் தலைவர்களின் மெழுகுச் சிலைகள் மற்றும் பாலிவுட் நடிகர்களின் சிலைகளும் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share