ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதோடு கதை எழுதி தயாரிக்கும் மியூசிக்கல் திரைப்படம் 99 சாங்ஸ். இந்தப் படத்தின் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் மற்றும் ஐடியல் என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றன. எஹான் பட், எடில்ஸி வர்கீஸ் ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.
ஏற்கனவே, படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் புதிய புரோமோ வீடியோவை ரஹ்மான் தனது [முகநூல்](https://www.facebook.com/arrahman/videos/10155037475971720/) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வீடியோவில் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிஷா கொய்ராலா, ரஞ்சித் பாரோட், ராகுல் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தை அடுத்த ஆண்டு (2018) வெளியிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.