இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில், உலகக் கோப்பை டி-20 போட்டிகளின்போது ஆதரவும், ஊக்கமும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அணி கடந்த வியாழனன்று மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மோதிய அரை இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது. விராத் கோலி இந்தத் தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3 அரைசதங்களுடன், மொத்தம் 273 ரன்களை இந்திய அணி சார்பாக குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராத் கோலி இன்று, தனது ட்விட்டர் பக்கத்தில், மறக்கமுடியாத தொடருக்கு நன்றி. எங்களுக்கு அயராது ஆதரவும், ஊக்கமும் அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.�,”
Wரசிகர்களுக்கு விராட் கோலி நன்றி
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel