மிருகம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ந்து அரவாண், யாகாவராயினும் நாகாக்க போன்ற பல படங்கள் நடித்திருந்தாலும் ஆதிக்கு பெரிதாக எந்த படமும் ஹிட் ஆகவில்லை. தொடர் தோல்வியால் அவர் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதே போல `டார்லிங்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நிக்கி கல்ராணிக்கு யாகவராயினும் நாகாக்க, கோ 2, கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்கள் தொடர் தோல்வியைத் தந்தது. இந்நிலையில் சரவண் இயக்கத்தில் வெளியான `மரகத நாணயம்’ திரைப்படம் இரண்டு பேருக்கும் பெரிய பிரேக் அப் கொடுத்துள்ளது.
மரகத நாணயம் சக்சஸ் மீட்டிங் ஜூன்24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற ஆதி, கதையின் வித்தியாசம் காரணமாக நடித்தேன். இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. இனிமேல் ஹீரோயிஸம் என்று இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த கதை உள்ள படங்களில் எந்த ரோலில் வேண்டுமேனாலும் நடிப்பேன். ஜெயிக்கிற கதைதான் என் டார்கெட்” என்றார். அதன் பிறகு பேசிய நிக்கி கல்ராணி, “இதுவரை நடித்த படங்களை விட இப்படம் மிகுந்த நம்பிக்கையைத் தந்துள்ளது. இப்போது நான் நடித்து வரும் படங்கள் அனைத்துமே நல்ல கதைகளில் உருவாகி வருவதால் ஹிட் படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இதுவரை ஹோட்டல்களில் தங்கியே தமிழ்ப்படங்களில் நடித்து வந்தேன். இப்போது சென்னையில் புதிதாக வீடு வாங்கி குடியேறி விட்டேன்” என்றார்.இந்த படத்தைத் தொடர்ந்து நெருப்புடா, கீ, ஹரஹர மகாதேவகி,பக்கா ஆகிய நான்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி.,”
