பொண்ணுங்கள ஒன் சைடா காதலிக்குற சில பசங்க எப்படியும் நம்ம காதல் கை கூடாதுங்குறது நல்லா தெரிஞ்சிருந்தும் அவங்க மனசை தேத்திக்க சில விஷயங்களை செய்வாங்க. அதுல ஒண்ணு.. வீட்டுக்கு யாராவது கல்யாண பத்திரிக்கை வச்சிட்டு போனா அதுல பொண்ணு, மாப்பிள்ளை பேரை அழிச்சுட்டு அவங்க ரெண்டு பேர் பேரை எழுதி ப்ரெண்ட்ஸ்கிட்ட கெத்தா காட்டுவாங்க. அந்த மாதிரி தான் கோயில் கல்வெட்டுல ஓபிஎஸ் பையன் பேரை ‘எம்.பி’ன்னு போட்ருப்பாங்கன்னு தம்பி ஒருத்தன் சொல்றான். குசும்பு அவங்களுக்கா இவனுக்கான்னு தெரியல.
சரி விடுங்க.. இவ்வளவு நாளா பிரஸ்ஸை மீட் பண்ணலையேன்னு பிரதமரை கலாய்ச்சு தள்ளிகிட்டு இருந்தாங்க. இப்பதான் தெரியுது. இதுக்குத் தான் ‘வா வா’ வண்டியில ஏத்தியிருக்காங்கன்னு. வடிவேலு கிட்னியை உருவுன மாதிரி பிரதமர் என்றும் பாராமல் ஒவ்வொரு ரியாக்ஷனுக்கும் மீம் போட்டு தள்ளிகிட்டு இருக்காங்க. இந்த ஒரு கண்டண்ட் போதும் 23ஆம் தேதி வரைக்கும் சமாளிச்சுடுவாங்க.. அப்டேட்டை பாருங்க. கமல் கோட்சேவை விட்டுட்டாரான்னு பார்த்துட்டு வாரேன்..
**@Kozhiyaar**
‘உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்ற வாக்கியம் ஒரு உரையாடலை துவக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது!!!
**@pachaiperumal23**
”கடைசி நேரத்தில் மோடி பிரஸ்மீட் ஏன்?” – கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சிகள்.
கடைசி நேரத்திலாவது பிரஸ்மீட் பண்ணினாரேன்னு சந்தோசப்படமா இப்படியா பேசறது?
**@Kannan_Twitz**
ஆப்பீஸ் பிரண்டுக்கு போன போட்டு ஏன்டா 2 நாளா ஆப்பீஸ் வரலனு கேட்டா… நா ஊர்ல இருக்கேன் மச்சான் இங்க நல்ல மழை அதான் வர முடியல அங்க எப்படி மழைனு கேட்டான், பட்டுனு போன கட் பண்ணிட்டேன்?
இங்கன(சென்னை) மோட்டார் போட்டாலும் தண்ணி வராதுனுன்றத தெரிஞ்சும் இந்த கேள்விய கேட்கறான் பாரு.
**@Suyanalavaathi**
தனக்கு வந்த கேள்விகளை அமித் ஷா பக்கம் தள்ளிவிட்ட மோடி – செய்தி #
உலகத்திலேயே பிரஸ் மீட்க்கு ஸ்டெப்னி வைத்தது நம்ம ஏழை தாயின் மகன் தான்பா !!

**@oorkkavalaan**
முதல் அடுக்குமாடி குடியிருப்பை அறிமுகப்படுத்தியது “ஆலமரம்”
பறவைகளுக்கு…
**@ShivaP_Offl**
பதிவியை துஷ்பிரயோகம் செய்பவர்களும்,
பதவியை முறைப்படி எப்படி பயன்படுத்துவதென்றே தெறியாமல் விழிப்பவர்களும் குற்றவாளிகளே???
**@Kozhiyaar**
எடுத்து பேசுவதற்காக பல எண்களும், எடுத்து விடக்கூடாது என்பதற்காக சில எண்களும் கைப்பேசியில் சேமித்து வைக்கப்படுகிறது!!!
**@manipmp**
ஆம்லெட்டுக்கு தூவுற பெப்பர் எப்போதும் அடுத்த டேபிளில் தான் இருக்கும்
#டிசைன்

**@Suyanalavaathi**
கல்வெட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் என பெயர் பொறிக்கப்பட்ட விவகாரம், ரவீந்திரநாத்குமார் கண்டனம் – செய்தி #
இவுங்களே போட சொல்லுவாங்களேம் அப்பறம் கண்டனம் தெரிவிச்சுருவாங்களாம்..
**@yugarajesh2**
காவலாளி, செய்தியாளர் சந்திப்புன்னா கேள்வி கேட்க வந்த பத்திரிக்கையாளர்களை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதுன்னு நினைச்சிட்டாரு போல
**@ArunkumarTNR**
என்னைக் கைதுசெய்தால் பதற்றம் அதிகரிக்கும்: கமல்
ஆண்டவரே நாயகன் படம் கெட்டப்பில் இருந்து முதலில் வெளியே வாங்க!!

**@HAJAMYDEENNKS**
ப்ரஸ்ஸை மீட் பண்றதுக்கு பெயர்தான் ப்ரஸ்மீட் – மோடி மொழிகள் !
**@mohanramko**
சோத்துக்காக யாரிடமும் கையேந்த கூடாது என்று வாழ்பவர்களையும் மாற்றி விடுகிறது, பஃபே சிஸ்டம்
**@Annaiinpillai**
ஹோட்டலில் சாப்பிட என்ன இருக்குனு மெனு எல்லாத்தையும் கேட்டுட்டு ரெண்டு இட்லினு சொல்றதெல்லாம் வெயிட்டரின் பொறுமைக்கான டிசைன்!

**@parveenyunus**
கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்தியை விட, அவரை சுட்டுக் கொன்ற கோட்சேவை பற்றி தான் அதிகம் பேசுகிறோம்.
**@SubashiniBA**
பரப்புரை முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வு எடுக்கலாம் – மோடி
இனி நீங்க நிரந்தரமாவே ஓய்வெடுக்கலாம் ஐயா யாரும் உங்களை ஒன்னும் சொல்லப்போறதில்லை

**@maha_devan_twit**
நாணயம், சில்லறை ரெண்டும் ஒன்னு தானே…
அப்புறம் ஏன் நீங்க ஒரு நாணயமாணவர் னு சொன்ன சிரிக்கிறாங்க…
நீங்க ஒரு சில்லறைப்பா னு சொன்ன அடிக்கிறாங்க..

**@Annaiinpillai**
நிறை குடம் நீர் தளும்பி விரயம் ஆகி விட கூடாது என்பதற்காக குறை குடம் ஆக்குகிறார் தண்ணீர் விடும் லாரி டிரைவர்கள்!
**@krishnaskyblue**
“தேனி கோவிலில் ரவீந்தரநாத் MP என பொறிக்கப்பட்ட கல்வெட்டு பற்றி எனக்கு தெரியாது!” – முதல்வர் பழனிசாமி
// அவரு கல்லா பெட்டில காசு எண்ணிட்டு இருக்கும்போது இந்த கல்வெட்டு சம்பவம் நடந்து இருக்குடா இதுக்கு போய் கிண்டல் பன்னிட்டு இருக்கீங்க

**@yaar_ni**
கோவில் செவுத்துல எக்ஸாம் நம்பரை எழுதினா பாஸ் ஆகிடுவோம்னு ஒரு குருட்டு நம்பிக்கை. அதுக்காக கல்வெட்டு எல்லாம் ஓவர் டா
**@parveenyunus**
கமல் கட்சி ஆரம்பித்ததால் நடந்த ஒரே விஷயம்..கோட்சே பிரபலமானது தான்.
-லாக் ஆஃப்,”
