இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.டாஸ் ஜெயித்த மேற்கிந்தியத் தீவுகள் பந்து வீசப்போவதாக தெரிவித்தது.முதல் பேட் செய்த இந்தியா இருபது ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.விராட் கோலி அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார்.பிறகு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 19.4 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதன்மூலம் மேற்கிந்தியத்தீவுகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இறுதிப்போட்டி வரும் ஏப்ரல் 3ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
