ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது சசிகலாவால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில் உள்நோக்கம் உள்ளதாக குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவை பார்த்ததாக பொய் சொன்னோம்” என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தினகரன்,” பதவிக்காக திண்டுக்கல் சீனிவாசன் இப்படி கூறுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை, சசிகலாவே எடுத்த வீடியோ எங்களிடம் உள்ளது. விசாரணை ஆணையத்தில் அதை ஒப்படைப்போம்”என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று( செப்டம்பர் 29) செய்தியாளர்களிடம் பேசிய குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,ஆர்.டி.ராஜேந்திரன்,” மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
அக்டோபர் 1 க்குப் பிறகு சசிகலாவே, ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என்று தினகரன் கூறியுள்ளார். அதே தினகரன்தான், மருத்துவமனையில் ஜெயலலிதா நலமாய் இருந்தபோது, அவரே எடுக்கச் சொல்லி, சிகிச்சை பெற்ற வீடியோவை சசிகலா எடுத்ததாக மாற்றிப் பேசியுள்ளார். ஆனால் அவரை ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை.
அதேபோல வீடியோ ஆதாரம் பற்றி கூறியுள்ளார். அதில்,”நான் மருத்துவமனையில் இளைத்துப்போய் உள்ளேன். அதை பார்க்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதால், சசிகலா வீடியோ எடுத்தார்” என்று கூறியுள்ளார். ஒருவர் தன்னுடைய உடல்நிலையை பார்க்க வேண்டும் என்றால், வீடியோ எடுத்து பார்ப்பாரா அல்லது கண்ணாடியில் பார்ப்பாரா என்று நான் கேட்கிறேன்.
அடுத்து வீடியோவில் ஜெயலலிதா டிவி பார்த்துக்கொண்டு இருந்ததாக தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதா தன்னை வீடியோ எடுக்க சொல்லியிருந்தால், சசிகலா வீடியோ எடுக்கும்போது அந்த வீடியோவை பார்த்துக்கொண்டிருப்பாரா அல்லது டிவியை பார்த்துக்கொண்டிருப்பாரா?. இதற்கான பதிலை தினகரனும், சசிகலாவும் கூற வேண்டும்.
ஜெயலலிதா டிவி பார்க்கும்போது எதற்காக சசிகலா வீடியோ எடுக்க வேண்டும். ஆகவே அதில் ஏதோ உள்நோக்கத்துடன்தான் ஜெயலலிதாவுக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் தெரியாமல் சசிகலா வீடியோ எடுத்துள்ளார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு” என்று தெரிவித்தார்.�,”