தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று (மே 27) சென்னை அமைந்தகரையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி,
“நான் இந்த கூட்டத்தில் பேச வேண்டாமென்றுதான் இருந்தேன். நானும் என் பையனும் கூட்டத்துக்கு ஒன்றாகத்தான் வந்தோம். அப்போது அவர் என்னிடம், ‘ஜூன் 4 ஆம் தேதி வரைக்கும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்க’ என்று சொன்னார்.
ஆனால், இங்கே நமது தலைவர் அண்ணாமலையின் பேச்சைக் கேட்டதும் எனக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால்தான் பேசுகிறேன்.
மேலும், டெல்லியில் கபில் சிபல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஈவிஎம் மெஷின்களில் என்னென்னவற்றை கண்காணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனால் நமது வெற்றி இன்னும் உறுதியாகிவிட்டது” என்று பேசினார்.
வி.பி. துரைசாமி பேசிக் கொண்டிருக்கும்போதே நிர்வாகிகள் சிலர், “இவருக்கு ஒரு சீட் கொடுத்திருக்கலாம். ஒரே மாவட்டம், ஒரே சமுதாயம்ங்குற பாலிடிக்ஸ்ல அமைச்சர் முருகன் தான் தடுத்துட்டாரு” என்று பேசிக் கொண்டனர் நிர்வாகிகள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
கலைஞர் கனவு இல்லம்: ஒரு லட்சம் வீடுகள்… தமிழக அரசு முக்கிய அப்டேட்!