ADVERTISEMENT

வாக்கு திருட்டு: ராகுல் காந்தி புகார்களுக்கு இன்று பதிலளிக்கும் இந்திய தேர்தல் ஆணையம்

Published On:

| By Mathi

Rahul Gandhi Election Commission

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்து வரும் வாக்குகள் திருட்டு விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 17) பதிலளிக்க உள்ளது.

ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போலி வாக்காளர்கள்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, வாக்கு திருட்டில் பாஜகவுடன் இணைந்து இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டது என்பது ராகுல் காந்தியின் புகார்.

ADVERTISEMENT

அதே போல சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் பீகாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

இனைத் தொடர்ந்து பீகாரில் இன்று ‘வாக்காளர் உரிமை யாத்திரையை’ ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விரிவான விளக்கத்தை இன்று அளிக்க இருக்கிறது.

டெல்லியில் இன்று காலை தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share