மதகஜராஜா பட விழாவில் கைநடுக்கத்துடன் பேசிய விஷால்… கலங்கும் ரசிகர்கள்!

Published On:

| By christopher

மதகஜராஜா பட விழாவில் நடிகர் விஷால் உடல் மெலிந்து கைநடுக்கத்துடன் பேசியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி வரும் 12 ஆம் தேதி ரிலீசாகிறது.

இந்த படத்தில் நடிகர் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனுசூட் ஆகியோருடன், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வெளியீட்டிற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ள நிலையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜனவரி 5) நடைபெற்றது.

இதில் படத்தின் இயக்குநர் சுந்தர் சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, விஷால், குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசுவதற்காக விஷால் மேடை ஏறினார். அவர் என்ன பேசுவார் என்று ஆவலோடு இருந்த அனைவரும் காத்திருந்த நிலையில், அவரின் உடல்நிலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காரணம், உடல் மெலிந்து காணப்பட்ட விஷால், கையில் மைக்கை கூட பிடித்து பேச முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார். அந்தளவிற்கு அவர் பேசும்போது கை நடுங்கிக் கொண்டே இருந்தது. இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அப்போது நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய டிடி, “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” என்று அவர் பேசி முடித்தவுடன் தெரிவித்தார். மேலும் அந்த சூழலை சமாளிக்கும் விதமாக சுந்தர் சி, விஜய் ஆன்டனி ஆகியோரை மேடைக்கு அழைத்து, மூவரையும் ஷோபாவில் அமர வைத்து படம் குறித்து பேச வைத்தார்.

இதற்கிடையே பட விழாவில் கை நடுக்கத்துடன் விஷால் பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த காலகட்டத்தில் தன்னுடைய பட புரமோஷனுக்கு கூட வர மாட்டேன் என அடம்பிடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களுக்கு மத்தியில், காய்ச்சலுடன் வந்து மதகஜராஜா பிரஸ் மீட்டில் விஷால் கலந்துகொண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதேவேளையில் அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பொங்கல் விடுமுறை: வசூல் வேட்டைக்கு தயாராகும் ஆம்னி பேருந்துகள்… தடுக்க 30 குழுக்கள்!

டாப் 10 நியூஸ் : ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை முதல் ஜல்லிக்கட்டு முன்பதிவு ஆரம்பம் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share